சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Ganesha Bhajans     

Shivan Bhajans     

Murugan Bhajans     

Durga Bhajans     

Krishna Bhajans     

Karuppar Bhajans     

கருப்பர்   - காக்கும் தெய்வமே-எங்கள் கருப்ப தெய்வமே  
ஏ.ஆர்.சுப்பையா, நேமத்தான்பட்டி
காக்கும் தெய்வமே-எங்கள்
கருப்ப தெய்வமே-நாங்கள்
நோக்கும் இட மெல்லாம்
உந்தன் வீரத்தோற்றமே

அள்ளிச் சொருகிய-மலர்
அழகுக் கொண்டையும்-வளர்
துள்ளு மீசையும்-உந்தன்
எழிலைக் கூட்டுதே

பகையழித்திடும்-சிறந்த
பரந்த தோள்களும்-நல்ல
கருத்த மேனியும்-உந்தன்
வலிமை காட்டுதே

காடு வீடெல்லாம்-உந்தன்
காவலில் உண்டு-உயர்
படி பதினெட்டும்-உந்தன்
பார்வையி லுண்டு

ஜாதி மல்லிகை-உயர்
சாந்து ஜவ்வாது-மணக்கும்
சாம்பி ராணியும்-உந்தன்
வரவைக் கூறுதே

சாய வேட்டியும்-உயர்
ஜரிகைப் பட்டுமே-உந்தன்
மேனி அழகிலே-தவழ்ந்து
மின்னிச் சொலிக்குதே

வெள்ளைக் குதிரையும்-உயர்
வீச்சரி வாளும்-நல்ல
தண்டை கிண்கிணி முழங்க
இங்கு வாருமே

கழன்றா டிடும்-அழகுச்
சுக்கு மாந்தடி-எடுத்து
விளையாடியே-ஐயா
ஓடி வாருமே

கெட்டி மேளமே-கொட்டி
உனை யழைக்கவே-இந்த
செட்டி மக்களாம்-நாங்கள்
சேர்ந்து வணங்கிடும்(எங்கள் காக்கும்)
Add (additional) Audio/Video Link
Other கருப்பர் songs

67 - அங்கே இடி முழங்குது (கருப்பர் )

66 - அள்ளி முடிச்ச கொண்டையப்பா (கருப்பர் )

65 - காக்கும் தெய்வமே-எங்கள் கருப்ப தெய்வமே (கருப்பர் )

64 - வந்தான் கருப்பன் விளையாட (கருப்பர் )

This page was last modified on Sun, 03 Mar 2024 19:53:03 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

bhajan song